by Team Bukit Timah
சிங்கப்பூர் இன நல்லிணக்க கட்டுரைப் போட்டி
புக்கிட் தீமா குடிமக்கள் ஆலோசனைக் குழுவும் கௌலூன் மன்றமும் இணைந்து முதல் முறையாகத் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்காகப் படைப்பாக்கச் சிந்தனையைக் கொண்ட எழுத்துப் போட்டியை ஏற்பாடு செய்துள்ளது. இப்போட்டியின் கருப்பொருள் "வேற்றுமையில் ஒற்றுமை" என்பதே ஆகும்.
புக்கிட் தீமா தொகுதியில் வசிக்கும் அனைத்துத் தொடக்கப்பள்ளி மாணவர்களும், தற்போது ராஃபிள்ஸ் பெண்கள் தொடக்கப்பள்ளி, பேய் ஹூயா பிரெஸ்பிடெரியன் தொடக்கப்பள்ளி மற்றும் புக்கிட் தீமா தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவர்களும் இப்போட்டியில் கலந்துகொண்டு, இன நல்லிணக்கத்தைப் பற்றித் தங்கள் அனுபவங்களையும் உணவர்களையும் தங்களது தாய் மொழிகளில் (சீனம், மலாய், தமிழ்) அல்லது ஆங்கிலத்தில் எழுத ஊக்குவிக்கப்படுகின்றனர்.
பங்கேற்பது எப்படி?
கருப்பொருள்: வேற்றுமையில் ஒற்றுமை
உங்களது வாழ்க்கையில் நடந்த கதைகளில் எந்தக் கதை "வேற்றுமையில் ஒற்றுமை" என்ற கருப்பொருளை உணர்த்துகிறது?
சிங்கப்பூர் ஆரம்பத்திலிருந்து பல்லின சமூகமாகவும் பல மதங்களைக் கொண்டுள்ள நாடாகவும் இருந்திருக்கிறது. நமது புரிந்துணர்வையும், பல இன மக்களிடையே நாம் கொண்டுள்ள ஒற்றுமையைக் கொண்டாடும் விதமாகவும் நமது அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 21ஆம் நாளை இன நல்லிணக்க நாளாகக் கொண்டாடுகிறது.
பிரதமர் லீ ஸியன் லூங் ஒரு முறை இன நல்லிணக்கத்தை இசைக்குழுவோடு ஒப்பீடு செய்தார்:
"உறுப்பினர்கள் பல்வேறு பின்னணிகளைக் கொண்டவர்களாக இருந்தாலும் ஒற்றுமையோடு வேலை செய்யவேண்டும். இது வாழ்நாள் முழுவதும் இருக்கக்கூடிய ஒரு நடைமுறை, இதை நாம் எப்போதும் மெருகேற்றிக்கொண்டிருக்கவேண்டும். சிங்கப்பூரில் நம்மிடையே இருக்கக் கூடிய வேற்றுமையில் ஒற்றுமை எனும் மனப்பான்மை நம் நாட்டின் பெருமைக்குரிய சாதனைகளில் ஒன்று. நம்மிடையே இருக்கக்கூடிய வேற்றுமைகளை நாம் பலவீனமாகப் பார்க்காமல், வலிமையாகப் பார்க்க வேண்டும். நாம் ஒற்றுமையாக இருக்கும்போது தான் அழகான இசையை நம்மால் உருவாக்கமுடியும்."
இந்நாளைக் கொண்டாட, "வேற்றுமையில் ஒற்றுமை" என்ற கருப்பொருளை கொண்டுள்ள கதையை எங்களுடன் பகிர்ந்துகொள்ள உங்களை அழைக்கிறோம். கட்டுரையின் கருப்பொருளைக் கொண்டு பல இன கலாச்சாரங்களின் அனுபவங்கள், இடை கலாச்சாரங்கங்களோடு பகிர்தல் மற்றும் புரிதல் போன்ற பலவிதமான அம்சங்களை நீங்கள் புகுத்தலாம்.
Submitted By: Amrita Thamburaj
Submitted By: Mahizhini
Submitted By: Olivia Rei Rani
Submitted By: Janani
Click here to download full essay
Submitted By: Srinika Raguraman
Click here to download full essay
பண்புக்கூறு அறிக்கை / Personal Data Protection
போட்டிக்கான வரைதல் / கட்டுரையின் எந்தவொரு சமர்ப்பிப்பும், பங்கேற்பாளர்களின் வரைபடத்தின் பல்வேறு வடிவங்களில் பல்வேறு தளங்களில் அமைப்பாளர்கள் மற்றும் அனைத்துக் கூட்டாளர்களும் மறு உருவாக்கம் செய்வதற்கான வரம்பற்ற, பிரத்தியேகமற்ற உரிமைகளை (திருத்துதல், மீண்டும் உருவாக்குதல், மொழிபெயர்ப்பது, காண்பித்தல், வெளியிடுதல் உள்ளிட்டவை) வைத்திருப்பதை ஏற்றுக்கொள்வதைக் குறிக்கிறது. / கட்டுரை) மேலும் இழப்பீடு இல்லாமல்.
போட்டிக்கான வரைதல் / கட்டுரையை சமர்ப்பிக்கும் போது, போட்டியாளர்களின் விஷயங்களில் தொலைபேசி அழைப்புகள், குறுந்தகவல்கள், மின்னஞ்சல்கள் போன்றவற்றின் மூலம் ஏற்பாட்டாளர்கள் நேரடியாகப் பங்கேற்பாளர்களைத் தொடர்புகொள்வார்கள் என்று ஒப்புக் கொள்ளப்படுகிறது. வழங்கப்பட்ட தனிப்பட்ட தகவல்களை அமைப்பாளர்களும் கூட்டாளர்களும் தனிப்பட்ட முறையில் அனுப்ப முடியாது. பங்கேற்பாளர்களின் அனுமதியின்றி போட்டியுடன் தொடர்பில்லாத பிற நிறுவனங்கள் அல்லது தனிநபர்கள் தொடர்புகொள்ளமுடியாது.
மேல் விவரங்களுக்குப் புக்கிட் தீமா சமூக மன்றத்தை 6466 2912 என்ற எண்ணிலோ அல்லது PA_BUKITTIMAHCC@pa.gov.sg என்ற மின்னஞ்சல் முகவரியின் வழியாக அணுகலாம்.